காசிமுத்து கௌசிகா
மேற்படி மாணவி மூங்கிலாறு உடையார்கட்டு முல்லைத்தீவை சொந்த இடமாகக் கொண்டவர். இம்மாணவியின் தாயார் இறந்ததின் பின்னர் சிறிது காலத்தில் தந்தை மறுமணம் செய்து கொண்டு போக அம்மம்மாவின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். பேத்தியார் கூலி வேலை செய்து இவரின் கல்விச் செயற்பாடு மற்றும் குடும்ப செலவுகளை கவனித்து வந்தார். இந்நிலையில் எமது நிறுவனத்தினூடாக Tech outreach Malaysia நிறுவனம் 2012 ம் ஆண்டு இம்மாணவிக்கு கல்விக்கான கொடுப்பனவு வழங்க ஏற்பாடு செய்து கல்விக் கொடுப்பனவு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. இதனிமித்தம் இம்மாணவி A/L பரீட்சையில் A,B,C பெறுபேற்றைப் பெற்று 2017 ம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு கலைப் பிரிவு பாடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். மேற்படி பல்கலைக்கழத்தில் தனது பட்டப்படிப்பை சிறந்த முறையில் முன்னெடுத்து 2022ம் சித்திரை மாதத்துடன் தனது பல்கலைகழக கல்வியை நிறைவு செய்துள்ளார். தற்சமயம் இவர் தனது சொந்த இடமான மூங்கிலாறு உடையார்கட்டு முல்லைத்தீவில் வசிக்கிறார். அரசாங்க வேலைகள் ஏதும் தற்சமயம் கிடைக்காததினால் முல்லைத்தீவில் இயங்கி வரும் ஆடையகத்தில் வேலை செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் பாடசாலைக் கல்விக்காக மாதாந்தம் ரூபா 1000.00 வழங்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக கல்விக்காக மாதந்தம் ரூபா 3000.00 வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் பாடசாலைக் கல்விக்காக மாதாந்தம் ரூபா 1000.00 வழங்கப்பட்டது. பின்னர் பல்கலைக்கழக கல்விக்காக மாதந்தம் ரூபா 3000.00 வழங்கப்பட்டது.


