போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்”
போதைவஸ்து பாவனையற்ற இளைஞர் சமூகத்தை “போதையை ஒழிக்கும் பாதையை வகுப்போம்” எனும் தொனிப்பொருளில் பாடசாலை மாணவர்களை விழிப்புணர்வூட்டும் நோக்கில் விசேட கருத்தரங்கு மு/குமுழமுனை மகாவித்தியாலைய பாடசாலை கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் போதைவஸ்துப் பாவனையும், நாட்டின் சட்டமும், போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்கான உளவளத்துணை, மனித உடலை சீரழிக்கும் போதைவஸ்துப் பாவனை, கல்வியின் முக்கியத்துவம் போன்ற முக்கிய தலைப்புக்களில் துரைசார்ந்தவர்களினால் விழிப்புணர்வு நிகழ்த்தப்பட்டது. Child First UK அமைப்பின் நிதி அணுசரனையிலும் CFCD நிறுவனத்தின் அமுலாக்கத்துடனும் இவ் விழிப்புணர்வு அமர்வு நடைபெற்றது.



