இராஜரட்ணம் யசிந்தா
மேற்படி மாணவி மூங்கிலாறு உடையார்கட்டு முல்லைத்தீவை சொந்த இடமாகக் கொண்டவர். இவர் சிறுவயதில் இருக்கும் போது தந்தை 2009 ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இறந்துள்ளார். தாயார் தான் கூலி வேலை செய்து இவரை பராமரித்து வந்தார். இந்நிலையில் 2011ம் ஆண்டு தொடக்கம் இம்மாணவியின் பல்கலைக்கழக கல்வி முடியும் வரை (2022) கல்விக் கொடுப்பனவை எமது நிறுவனத்தின் ஊடாக TOM நிறுவனத்தினர் வழங்கி வந்தார்கள்.
மேற்படி மாணவி O/L பரீட்சையில் 2A,2B,4C,S பெறுபேற்றை பெற்று உயர்தரத்தில் விஞ்ஞானப் பாடத்தை கற்று வந்தார். பின்னர் A/L பரீட்iயில் 2C,S பெறுபேற்றைப் பெற்று ஊவா பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்.
இந்நிலையில் A/L பரீட்சை எடுத்தவுடன் கல்விக் கொடுப்பனவுகளை சில நன்கொடையாளர்கள் நிறுத்துவது வழக்கம். அதே போல் இம்மாணவியும் A/L பரீட்சை எடுத்தவுடன் கொடுப்பனவு நிறுத்தப்பட்டது. ஆறு மாத காலத்திற்குப் பின்னர் இம்மாணவி மீண்டும் எமது அலுவலகத்திற்கு வருகை தந்து தான் ஊவா பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி உள்ளளேன். எனது அம்மாவும் சுகயீனம் காரணமாக கூலி வேலைக்குப் போவதில்லை. பல்கலைக்கழகம் செல்வதென்றால் குறிப்பிட்ட பணத்தொகை தேவை அது என்னிடம் இல்லை அதனால் நான் பல்கலைக்கழகம் போக மாட்டேன் கூறி நொந்துள்ளார். இந்நிலையில் அந்த காலப்பகுதியில் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்த சொ.யோகநான் ஐயா அவர்கள் உடனடியாக TOM நிறுவனத்திற்கு மேற்படி தகவலை அறிவித்து அவர்கள் மூலம் உதவி பெற்று மாதாந்தம் ரூபா 5000.00 வழங்க ஏற்பாடு செய்தார். அத்துடன் உடனடியாக பல்கலைக்கழகம் செல்ல தேவையான பொருட்கள் வாங்குவதற்காகவும் போக்குவரத்து செலவுக்காகவும் ரூபா 10000.00 வழங்கி வைத்து அம்மாணவியின் உயர்கல்வி தடைப்படாமல் தொடர்ந்து கற்பதற்கு வழிகாட்டியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


